பெண் உட்பட இருவர் கைது
மேலுார் : எஸ்.ஐ., க்கள் தினேஷ், பிரகாஷ் அழகர்கோயில் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புகையிலை விற்ற சொக்கம்பட்டி சந்திரா 72, அழகர் கோயில் தனராஜ் 57, ஆகியோரை கைது செய்து 675 கிராம் புகையிலையை பறிமுதல் செய்தனர்.
வி.சி.க.,வினர் மீது வழக்கு
மேலுார் : இங்குள்ள மெயின் ரோட்டில் அனுமதியின்றி வி.சி., கட்சியின் மாவட்ட செயலாளர் அரசமுத்துப்பாண்டி தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 30 பேர் மீது மேலுார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மது விற்ற இருவர் கைது
மேலுார் : எஸ்.ஐ., பிரகாஷ் தும்பைப்பட்டி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது மதுவிற்ற தாமரைப்பட்டி லட்சுமணன் 24, டி அம்பல காரன்பட்டி ரமேஷ் 45, ஆகியோரை கைது செய்து 58 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தாலிச்செயின் பறிப்பு
மேலுார் : ஸ்டார் நகரைச் சேர்ந்தவர் சாய் லட்சுமி 60. நேற்று காலை கணவர் மாணிக்கம் நடைப்பயிற்சிக்காக சென்றபோது, வீட்டில் தனியாக இருந்தார். திடீரென வீட்டுக்குள் நுழைந்த நபர் சாய்லட்சுமியின் வாயை துணியால் மூடி, கத்தியால் குத்தி அவர் அணிந்திருந்த 8 பவுன் தாலிச் செயினை பறித்து தப்பினார். சாய்லட்சுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலுார் இன்ஸ்பெக்டர் சிவசக்தி, போலீசார் தினேஷ் விசாரிக்கின்றனர்.
நீரில் மூழ்கி சிறுவன் பலி
உசிலம்பட்டி: தேனி மாவட்டம் ஏத்தக்கோயில் செந்தில்குமார், வாசியம்மாள் தம்பதியரின் மகன் ராமசாமி 14. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. தந்தை இறந்த நிலையில் தாயாருடன் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி அருகே வாசிநகரில் உள்ள தாத்தா வீட்டுக்கு வந்தவர், அருகேயுள்ள அசுவமாநதி தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் திருடியவர் கைது
சோழவந்தான்: இரும்பாடி சரவணன் 53, கூலித் தொழிலாளி. இவர் வேலைக்கு சென்றபோது சோழவந்தான் பேட்டை பாசன கால்வாய் கரையில் நிறுத்தியிருந்த டூவீலர் திருடு போனது. சோழவந்தான் எஸ்.ஐ., அழகர்சாமி விசாரித்து டூவீலரை திருடிய பசும்பொன் நகர் ரங்கசாமியை 35, கைது செய்தார். இவர்மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
மது விற்றவர் கைது
பேரையூர்: கம்மாளப்பட்டி வாழவன் 55. இவர் அதே ஊரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் மது விற்றுக் கொண்டிருந்தார். ரோந்து சென்ற எஸ்.ஐ கருப்பையா அவரை கைது செய்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.