/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.2 லட்சம் கேட்டு காதலர்களின் தனிமை படத்தை பரப்பி ஆள் கடத்தலில் ஈடுபட்ட 2 நண்பர்களுக்கு போலீஸ் காப்பு
/
ரூ.2 லட்சம் கேட்டு காதலர்களின் தனிமை படத்தை பரப்பி ஆள் கடத்தலில் ஈடுபட்ட 2 நண்பர்களுக்கு போலீஸ் காப்பு
ரூ.2 லட்சம் கேட்டு காதலர்களின் தனிமை படத்தை பரப்பி ஆள் கடத்தலில் ஈடுபட்ட 2 நண்பர்களுக்கு போலீஸ் காப்பு
ரூ.2 லட்சம் கேட்டு காதலர்களின் தனிமை படத்தை பரப்பி ஆள் கடத்தலில் ஈடுபட்ட 2 நண்பர்களுக்கு போலீஸ் காப்பு
ADDED : ஜூலை 31, 2024 10:53 PM
மதுரை:மதுரையில் நண்பரிடம், 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி, காதலியுடன் தனிமையில் இருந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ததோடு, காதலியின் தம்பி, உறவினரை கடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், விளாங்குடியைச் சேர்ந்த 22 வயது பெண், மதுரை விமான நிலையத்தில் தனியார் நிறுவனத்தின் பணபரிமாற்ற பிரிவில் பணியாற்றுகிறார். இவரது காதலர் பிரவீன். தனியார் வங்கி ஊழியர். கல்லுாரி ஒன்றில் முதுகலை படிப்பு படிக்கிறார். பிரவீனுக்கும், அவரது நண்பர்களுக்கும் கல்லுாரியில் தகராறு ஏற்பட்டது.
பிரவீன் ஏற்பாட்டில், அவரது நண்பர் விளாங்குடி வருமான வரி காலனி மணிமாறன், ஜெய்ஹிந்த்புரம் சிவமணியுடன் கல்லுாரிக்கு சென்று தாக்க திட்டமிட்டார். இதற்கிடையே பிரவீன் சமரசமாக சென்றதால் ஆத்திரமுற்ற மணிமாறன், சிவமணி, 'எங்களை கேட்காமல் சமரசம் செய்துகொண்டது தவறு. எங்களுக்கு, 2 லட்சம் ரூபாய் கொடு' என மிரட்டினர்.
தர மறுத்த பிரவீனின் மொபைல் போனை பறித்து பார்த்தபோது, 22 வயது பெண்ணுடன் அவர் நெருக்கமாக இருக்கும் போட்டோ இருந்தது. 'பணம் தராவிட்டால் இந்த போட்டோவை சமூகவலைத்தளத்தில் பரப்புவோம்' என மிரட்டினர். பிரவீன் பணம் கொடுக்காத நிலையில் அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தனர்.
இதையறிந்த அப்பெண்ணின் உறவினர்கள், மணிமாறன் வீட்டிற்கு சென்று அவரது மொபைல் போனை வாங்கி ஆய்வு செய்ததில், அவர் பதிவேற்றம் செய்யவில்லை எனத் தெரிந்தது.
இதை தொடர்ந்து தங்கள் கைவசம் இருந்த மணிமாறன் மொபைல் போனை அவரிடம் கொடுக்க அப்பெண்ணின் தம்பி, உறவினருடன் சென்றபோது இருவரையும் மணிமாறன், சிவமணி உட்பட சிலர் தாக்கி ஆட்டோவில் கடத்தினர். அவர்களிடம் இருந்து தப்பிய அப்பெண்ணின் தம்பி, குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
புகாரின்படி, கூடல்புதுார் போலீசார், அப்பெண்ணின் உறவினரை நேற்று மீட்டு, சிவமணி, மணிமாறன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.