ADDED : மே 31, 2026 10:33 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சிலைமான் ஜெயச்சந்திரன், தெப்பக்குளம் போலீஸில் புகார் ஒன்றை அளித்தார். அதில், 2 நாட்களுக்கு முன் தெப்பக்குளம் அருகே தனக்கும், மதுரை ஆயுதப்படை போலீஸ்காரர் பிரவீன் குமாருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது, எனது கழுத்தில் அணிந்து இருந்த தங்கச் செயினை பிரவீன் குமார் பறித்துக் கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து செயினை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இப்புகாரின் உண்மைத் தன்மை குறித்து போலீசார் நேற்று மாலை வரை விசாரணை நடத்தினர். முடிவில், புகாரில் உண்மை இல்லை எனக் கூறி, இரு தரப்பினரிடமும் நடந்த சம்பவம் குறித்து எழுதிப் பெற்றுக் கொண்டனர். தேவைப்பட்டால் மீண்டும் விசாரிப்போம் என எச்சரித்து இருவரையும் விடுவித்தனர்.
