/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டி. மேட்டுப்பட்டி ரோட்டில் பள்ளங்கள்
/
டி. மேட்டுப்பட்டி ரோட்டில் பள்ளங்கள்
ADDED : பிப் 10, 2025 05:00 AM

பாலமேடு: டி.மேட்டுப்பட்டி ரோட்டின் பள்ளத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பள்ளி மாணவர்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
வாடிப்பட்டி -- பாலமேடு ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள டி.மேட்டுப்பட்டி கரட்டு பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இல்லை. இதனால் சாலையில் கழிவுநீர் செல்வதால், சுகாதாரம் பாதிப்பதுடன் ரோட்டில் 'மெகா சைஸ்' பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இதில் தேங்கும் கழிவுநீரை கடந்து செல்ல முடியாமல் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்தும், வாகனங்களும் பாதிக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் வடிகால் கட்ட முடிவு செய்த பகுதிக்கு எதிர் திசையில் அமைத்தனர்.
ரோட்டில் ஓடும் கழிவுநீர் இந்த வடிகாலுக்கு செல்ல சாலையின் குறுக்கே குழாய் பதித்தும் பயனில்லை. ரோட்டை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

