ADDED : செப் 13, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: ஸ்ரீவில்லிபுத்துார் கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லுாரி மாணவிகள் மேலுார், செட்டியார்பட்டியில் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி அளித்தனர்.
ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி, குழு ஆலோசகர் ஜெயபிரபா தலைமையில் மாணவிகள் தயாஹரிணி, ஷோபிகா, தங்கபுஷ்பம், சயனா, சலீம், சந்தியா பூரணி, சூர்யா, மாரிசெல்வி, கிருஷ்ணவேணி, சுஷ்மா உள்ளிட்ட மாணவிகள் தென்னையில் மகசூலை அழிக்கும் காண்டாமிருக வண்டை ரைனோலியூர் மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கலவையை பயன்படுத்தி கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளித்தனர்.

