/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேசியக் கொடியுடன் பா.ஜ.,வினர் ஊர்வலம்
/
தேசியக் கொடியுடன் பா.ஜ.,வினர் ஊர்வலம்
ADDED : ஆக 14, 2024 12:54 AM
உசிலம்பட்டி : இந்தியாவின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உசிலம்பட்டியில் தேசியக்கொடியுடன் பா.ஜ., வினர் ஊர்வலம் நடத்தினர்.
மாநில பா.ஜ., இளைஞரணி தலைவர் ரமேஷ்சிவா தலைமை வகித்தார். பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள், மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் சசிகுமார், துணைத்தலைவர் ரஞ்சித்குமார், செயலாளர் பாரதிராஜா, இளைஞரணி தலைவர் கார்த்திகேயா, செயலாளர் மனோ கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
உசிலம்பட்டி - திருமங்கலம் விலக்கில் இருந்து டூவீலரிலும், நகர்பகுதியில் நடந்தும் ஊர்வலமாக சென்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து நிறைவு செய்தனர்.