ADDED : செப் 02, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகராட்சி கருக்கட்டான்பட்டி காலனியில் வசிக்கும் மக்களுக்கு பொதுக்கழிப்பிட வசதி கேட்டு கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று காலனி அருகே உள்ள கோயில் மானிய இடத்தில் கழிப்பிட வசதி செய்து தர வலியுறுத்தி அந்தப்பகுதியில் வி.சி.க., கொடியை நட்டு ஆக்கிரமிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார், கழிப்பிட வசதி குறித்து நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்கிறோம் என சமரசம் செய்தனர்.