ADDED : ஆக 10, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உத்தப்பநாயக்கனுார் அருகே கல்லுாத்து கிராமம் வழியாக குடிநீர் பிராதன குழாய் வருகிறது.
இப்பகுதி மக்கள் இணைப்பு குழாய் மூலம் குடிநீரை பிற தேவைகளுக்கும் பயன்படுத்தனர். இதனால் அதிகாரிகள் குழாயை அடைத்தனர். இதை கண்டித்து நேற்று காலை 11:00 மணிக்கு உசிலம்பட்டி – விக்கிரமங்கலம் ரோட்டில் அரைமணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. போலீசார், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ‘ஓரிரு நாட்களில் இணைப்பு வழங்குகிறோம். குடிநீர் தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்’ என சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
