ADDED : ஜூன் 17, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் ஸ்டார் பிரண்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் தினமும் மதியம் ஆயிரம் பேருக்கு உணவு, குடிநீர், பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
நுாறாவது நாளாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் மதிச்சியம் இன்ஸ்பெக்டர்கள் சித்ரகலா, ஷோபனா உணவு வழங்கினர். அறக்கட்டளை நிறுவனர் குரு கூறுகையில், ''இதுவரை ஒருலட்சம் பேருக்கு உணவு, பழங்கள் வழங்கியுள்ளோம். வைகை ஆற்றை துாய்மைப்படுத்தவும், ஆற்றங்கரையோரம் 200 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும் உள்ளோம்.
இக்கல்வியாண்டில் வசதியில்லாத மாணவர்களுக்கு உதவித்தொகை, சீருடை, பெண்கள் தன்னிறைவு பெற தையல் இயந்திரங்களை வழங்கி வருகிறோம்'' என்றார்.