/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு
/
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு
ADDED : ஆக 30, 2024 06:06 AM
மதுரை : மதுரையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், புதிய ஓட்டுச் சாவடிகள் அமைத்தல் குறித்து அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் கண்ணன், ஆர்.டி.ஓ.,க்கள் ஷாலினி, ஜெயந்தி, சாந்தி, ரவிச்சந்திரன், தாசில்தார் ஹேமா உட்பட பலர் பங்கேற்றனர். அரசியல் கட்சிகளில் மதுரை தெற்கு மாவட்ட காங்., முன்னாள்தலைவர் விஜயபிரபாகரன், வடக்கு தொகுதி நிர்வாகி ராஜா உட்பட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் உள்ள 2727 ஓட்டுச் சாவடிகளில் 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரிக்க வேண்டும்.
ஓட்டுச்சாவடி மையங்களின் இடம் மாற்றம், பெயர் மாற்றம், புதிய ஓட்டுச்சாவடி அமைத்தல் குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பெற்று செப்.3 க்குள் அப்பணிகளை முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இப்பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கலெக்டர் சங்கீதா கேட்டுக் கொண்டார்.