ADDED : ஏப் 13, 2024 02:49 AM

அ நிறம் | அளவு
மதுரை : மதுரை அருணாச்சலபுரம் பாலகிருஷ்ணன்25. போட்டோகிராபர். இவர் 2021 ல் மொட்டை மாடியில் வைத்து ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். மதுரை டவுன் மகளிர் போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிந்தனர். அவ்வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமாரவேல் அளித்த உத்தரவு:
பாலகிருஷ்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
