ADDED : ஜூலை 24, 2026 07:11 PM
மதுரை: மதுரையில் கோட்ட ரயில் பயனாளர்கள் ஆலோசனைக் குழு (டி.ஆர்.யூ.சி.சி.,) கூட்டம் நடந்தது. மூத்த கோட்ட வணிக மேலாளர் கணேஷ் வரவேற்றார்.
கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, மதுரை கோட்டத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகள், ஸ்டேஷன்களின் சீரமைப்பு பணிகள், உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்து பேசினார். அனைத்து லெவல் கிராசிங்குகளும் படிப்படியாக அகற்றப்பட்டு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்றார்.
தொழில் வர்த்தக சங்கம் சார்பில் ஜெகதீசன், அந்துவான், , பத்மநாபன், சாமி திராவிடமணி, போடி ஏலக்காய் விவசாயிகள் சங்கம் சார்பில் ராதாகிருஷ்ணன், பயணிகள் சங்கம் சார்பில் அய்யனார், சுந்தரம், மாற்றுத்திறனாளி பெண்கள் நலச் சங்கம் சார்பில் மோகனப்பிரியா, எம்.பி.,க்களின் பிரதிநிதிகளாக சிவசுந்தரம், கலெக்டர் சார்பில் தாசில்தார் கோபி பங்கேற்று பேசினர்.
மதுரை ஸ்டேஷனில் உள்ள பார்க்கிங் பிரச்னை, மெமு ரயில்களுக்கான பணிமனை அமைத்தல், கோவை – மதுரை; போடி – மதுரை வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள், காரைக்குடி – மதுரை இடையே ரயில் வசதி, திருப்பரங்குன்றம் பிளாட்பாரங்களை நீளப்படுத்துதல், ஆபத்தை உணராமல் தண்டவாளங்களை கடப்பதை தவிர்க்கும் வகையில் லிப்ட் அல்லது சுரங்கப்பாதை வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோட்ட வணிக மேலாளர் மோகனப்பிரியா நன்றி கூறினார்.
