தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மழை: மின்வாரியம் எச்சரிக்கை

மழை: மின்வாரியம் எச்சரிக்கை

மழை: மின்வாரியம் எச்சரிக்கை


ADDED : மே 20, 2024 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2024 06:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை : மதுரையில் சில நாட்களாக மழை பெய்வதால், மின்விபத்துகளை தவிர்க்கும் வகையில், தமிழ்நாடு மின்வாரியம் மின்தடை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்த பகிர்மான கழக அறிக்கை : பொதுமக்கள் தாங்களாக மின்சாதனப் பழுதை கையாளக்கூடாது; அறுந்து கிடக்கும் மின்கம்பி, இழுவைக் கம்பிகளை தொடக்கூடாது; மின்கம்பி தடத்தில் பந்தல், விளம்பரப் பலகை அமைக்கக் கூடாது; வீடுகளில் விபத்துகளை தவிர்க்க 'ரெசிடியூயல் கரண்ட் டிவைஸ்' பொருத்த வேண்டும்'' என உத்தரவிடப்பட்டுள்ளது.

மழைக் காலங்களில் மின்தடை ஏற்பட்டால் பொதுமக்கள் 94987 - 94987 என்ற இலவச எண்ணிலும், semdua@tnebnet.org என்ற இமெயில் முகவரியிலும் புகார் அளிக்கலாம்.

மின்தடை ஏற்பட்டால் அப்பகுதி கோட்ட பொறியாளர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மதுரை வடக்கு கோட்டம்: தல்லாகுளம், கோரிப்பாளையம், செல்லுார், தத்தனேரி, ரேஸ்கோர்ஸ் ரோடு, ரிசர்வ் லைன், சொக்கிகுளம், அண்ணா நகர், சதாசிவம் நகர், கே.கே.நகர், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, புதுார், மூன்றுமாவடி, மேலமடை, கோமதிபுரம், வண்டியூர், சிவகங்கை ரோடு, பாண்டி கோயில், திருப்பாலை, பார்க் டவுன், பாமா நகர், ஆனையூர், பனங்காடி பகுதியினர் 94458 52933ல் தொடர்பு கொள்ளலாம்.

தெற்கு கோட்டம்: சுப்பிரமணியபுரம், தெற்குவெளி வீதி, பெரியார் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், எல்லீஸ் நகர், தமிழ்ச் சங்கம் ரோடு, ஆரப்பாளையம், புட்டுத் தோப்பு, யானைக்கல், மீனாட்சி அம்மன் கோயில், சித்திரை, மாசி வீதிகள், குயவர்பாளையம் ரோடு, முனிச்சாலை ரோடு, காமராஜர் ரோடு, அனுப்பானடி, டீச்சர்ஸ் காலனி, சிந்தாமணி பகுதி மக்கள் 94458 52944ல் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கு கோட்டம்: விளாங்குடி, ஹவுசிங் போர்டு, கூடல்நகர், பாத்திமா கல்லுாரி, ஞானஒளிவுபுரம், பைபாஸ் ரோடு, காளவாசல், கோச்சடை, கீழவாசல், எஸ்.எஸ்.காலனி, பழங்காநத்தம், பசுமலை, திருப்பரங்குன்றம், திருநகர், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், அவனியாபுரம், டி.வி.எஸ் நகர், சத்ய சாய் நகர் பகுதியினர் 94458 52966ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us