ADDED : மார் 25, 2024 06:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு, : அலங்காநல்லுார் ஒன்றியம் டி.மேட்டுப்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளி முன் மழை நீருடன் கழிவு நீர் தேங்குவதால் சுகாதாரம் பாதிக்கிறது.
பாலமேடு - வாடிப்பட்டி மெயின் ரோட்டோரம் தாழ்வான பகுதியில் பள்ளி அமைந்துள்ளது. கடந்தாண்டு அரசின் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற இப்பள்ளியின் நுழைவு வாயில் முன்டு 20 மீட்டர் தொலைவுக்கும் மேலாக ரோடு, புதிதாக கட்டிய வாய்க்கால் இடையே மழை நீருடன் கழிவுநீரும் தேங்குகிறது.
சிறு மழை பெய்தாலும் மேட்டுப்பகுதியில் இருந்து வரும் மழை நீர் தேங்குவதால் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். சுகாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் வடிகால் வழியாக மழைநீர் செல்லவும், பள்ளமான பகுதியில் மண் நிரப்பவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்தினர்.

