தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கோடை உழவுக்கு கை கொடுக்கும் மழை

கோடை உழவுக்கு கை கொடுக்கும் மழை

கோடை உழவுக்கு கை கொடுக்கும் மழை


ADDED : மே 20, 2024 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2024 06:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை கோடை உழவுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது, என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

விவசாயிகள் கூறியதாவது: கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் மானாவாரி விவசாயிகள் ஆடி 18ல் நெல் நாற்றுப் பாவவில்லை. காய்கறிகளும் பயிரிடவில்லை. ஆழ்குழாய், கிணறுகளில் தண்ணீர் இருந்த விவசாயிகள் நெல் நாற்று பாவினர்.

இந்தாண்டு சமீப நாட்களாக மழை பெய்கிறது. இது கோடை உழவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இந்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். காலியிடங்களில் புல் முளைக்கும். அது கால்நடைகளுக்கு தீவனமாகும். இதனால் கால்நடை தீவனச் செலவும் குறையும். இம்மழை தொடர்ந்தால் ஆடி 18ல் நெல் நாற்று பாவ முடியும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us