ADDED : ஆக 22, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் நுழைவு பகுதியிலுள்ள சுரங்கப்பாதைக்குள் மழைநீர் தேங்குவதை தவிர்க்க நேற்று ஆய்வு நடந்தது.
சுரங்கப் பாதைக்குள் மழை காலங்களில் மழை நீர் தேங்குகிறது. அருகிலுள்ள கண்மாய் நிரம்பும் காலங்களில் பக்கவாட்டு சுவர் மூலம் சுரங்கப்பாதைக்குள் தண்ணீர் வரும். பல நாட்கள் தண்ணீர் தேங்கி நிற்கும். அதில் வாகனங்கள் சிக்கி தவிக்கும்.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நேற்று மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா, நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் லோகா கணேஷ், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் முத்து, உதவி பொறியாளர் சாலமன் ஆய்வு செய்தனர். தண்ணீரை வெளியேற்ற கூடுதல் மோட்டார் அமைக்கவும், மின்விளக்குகள் அமைக்கவும் மாநகராட்சி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.