/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அதிகரிக்கும் எலி மருந்து இறப்புகள்
/
அதிகரிக்கும் எலி மருந்து இறப்புகள்
ADDED : பிப் 28, 2025 06:13 AM
மதுரை: எலி மருந்து சாப்பிட்டு சிகிச்சை பெறுவோர் மதுரை அரசு மருத்துவமனையில் அதிகரித்து வருகின்றனர். மாதம் சராசரியாக 50 பேர் இப்பாதிப்பிற்கு இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் குடும்பத்தகராறு தான் காரணம் என்கின்றனர் டாக்டர்கள்.
அவர்கள் கூறியதாவது: எலி பேஸ்ட், பவுடர், கேக் வடிவங்களில் எலிகொல்லி மருந்துகள் விற்கப்படுகின்றன. அதில் ஜிங்க் பாஸ்பைடு சதவீதம் அதிகமாக இருப்பதால் அதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயல்பவர்களின் கல்லீரல் கடுமையாக சேதம் அடைகிறது. இதனால் ரத்தம் உறையும் தன்மை குறைந்து ரத்தம் நிற்காமல் வெளியேறும்.
'கூமரால்' மருந்தை சாப்பிடும் போது ரத்தம் உறையும் தன்மையை பாதிப்பதால் இறப்பு ஏற்படும். ஜனவரியில் மட்டும் எலிமருந்து பேஸ்ட் சாப்பிட்ட 24 பேரில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதுபோன்ற மருந்துகளை சாப்பிட்டால் சிகிச்சை அளித்தாலும் குணப்படுத்த முடியாது என்றனர்.