/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் எலிகள் ஓடி விளையாட பொந்துகள்
/
அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் எலிகள் ஓடி விளையாட பொந்துகள்
அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் எலிகள் ஓடி விளையாட பொந்துகள்
அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் எலிகள் ஓடி விளையாட பொந்துகள்
ADDED : ஜூன் 01, 2024 05:07 AM

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை புற்றுநோய் மருத்துவ பிரிவு முன்பகுதியில் எலிகள் ஓடி விளையாடும் வகையில் ஏராளமான பொந்துகள் உருவாக்கப்பட்டு கவனிப்பாரற்று உள்ளது.
இப்பிரிவு நுழைவாயிலின் வலது பக்கத்தில் சிமென்ட் பெஞ்சுகளை ஒட்டி ஏராளமான எலி பொந்துகள் உள்ளன. பகலில் நோயாளிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பதுங்கியிருக்கும் எலிகள் இரவில் சுதந்திரமாக வெளியேறி குப்பைத்தொட்டியில் மீந்து கிடக்கும் உணவை உண்கின்றன. பொந்துகளை ஒட்டி கழிவுநீர் வெளியேறும் தொட்டியின் மூடியும் சேதமடைந்துள்ளது. இங்குள்ள பள்ளமான பகுதிகள் எல்லாம் வெறும் அட்டைப்பெட்டியால் மூடப்பட்டுள்ளன. அதற்குள்ளும் எலிகள் விளையாடுகின்றன.
வேர்விட்ட செடிகள்
அருகிலுள்ள நர்சிங் விடுதி வளாகத்தின் மொட்டை மாடி ஓரத்தில் இருந்து கீழ்ப்பகுதி வரை நிரந்தரமாக தண்ணீர் வடிகிறது. இதனால் பாரம்பரியமிக்க கற்களால் ஆன கட்டடத்தின் மூலைப்பகுதியில் நிரந்தரமாக பாசி படிந்துள்ளது. தொடர்ந்து நீர் கசிவதால் கட்டட இடுக்குகளில் செடிகள் வளர்கின்றன. மூன்றடி உயரத்திற்கு மேலுள்ள செடிகளை அகற்றாவிட்டால் கட்டட இடுக்குகளில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
தரையில் உள்ள எலி பொந்துகளை இடித்து பேவர் பிளாக் தரைத்தளம் அமைக்க வேண்டும். கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகளையும் பொதுப்பணித்துறையினர் அகற்ற வேண்டும்.