ADDED : மே 24, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பத்ரகாளியம்மன் கோயில் உற்ஸவ விழா மே 19ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
பொங்கல் வைத்தல், விளக்கு பூஜை, முளைப்பாரி கரைத்தல், தீச்சட்டி எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. இறுதிநாளான நேற்று முன்தினம் இரவு மறு பூஜை விழா நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. கருப்பண்ண சுவாமிக்கு கிடா வெட்டி பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
