ADDED : மே 08, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில், செஞ்சிலுவை சங்க நிறுவனர் ஜூன் ஹென்றி டூனான்ட் தினம் கடைபிடிக்கப்பட்டது. நிறுவனர் படத்திற்கு கலெக்டரும், செஞ்சிலுவை சங்கத் தலைவருமான பிரவீன்குமார் மாலை அணிவித்தார். செயலாளர் ஜோஸ், துணைத் தலைவர் ஜெயபால், நிர்வாகிகள் விமல், முன்னாள் செயலாளர் ராஜ்குமார், அட்சயப்பாத்திரம் டிரஸ்ட் தலைவர் நெல்லைபாலு, முன்னாள் இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் பாண்டியராஜன், பி.ஆர்.ஓ., சாலிதளபதி பங்கேற்றனர்.
கலெக்டர் பேசுகையில், ‘‘பேரிடர் காலங்களில் மக்களுக்கு சேவையாற்றுகிறது செஞ்சிலுவை சங்கம். இதில் இளைஞர்கள் அதிகம் சேர வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.
