/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வருவாய்த்துறை அலுவலர் சங்க வைரவிழா தபால் உறை வெளியீடு
/
வருவாய்த்துறை அலுவலர் சங்க வைரவிழா தபால் உறை வெளியீடு
வருவாய்த்துறை அலுவலர் சங்க வைரவிழா தபால் உறை வெளியீடு
வருவாய்த்துறை அலுவலர் சங்க வைரவிழா தபால் உறை வெளியீடு
ADDED : ஜூலை 25, 2024 04:50 AM

மதுரை: மதுரையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 60 ம் ஆண்டு வைரவிழா நேற்று நடந்தது. தலைமை தபால் நிலைய அலுவலர் உமா வரவேற்றார்.
கலெக்டர் சங்கீதா தபால் உறையை வெளியிட்டார். தபால் உறையை பெற்றுக் கொண்ட அத்துறையின் தென்மண்டல தலைவர் ஜெய்சங்கர் பேசுகையில், ''மக்களுக்கான அரசு நலத்திட்டங்கள் பலவற்றிலும் மாவட்ட நிர்வாகத்துடன் தபால் துறையும் இணைந்து செயல்படுகிறது.
இதை மாநில அளவிலும் சிறப்பாக செயல்படுத்த ஒத்துழைப்பு அளிப்போம்'' என்றார்.
தபால்துறை முதுநிலை கண்காணிப்பாளர் பொன்னையா, ஆர்.டி.ஓ., ஷாலினி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கோபி, தபால்துறை துணை அலுவலர் கோபி, தென்மாவட்ட வருவாய் அலுவலர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் எம்.பி.முருகையன், பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் கூறுகையில், ''வைரவிழாவையொட்டி 60 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். ஆக.,3 ல் சென்னை பொது மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி, சாத்துார் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்'' என்றனர்.