/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெப்ப சலனத்திற்கு நிவாரணம்: உதயகுமார்
/
வெப்ப சலனத்திற்கு நிவாரணம்: உதயகுமார்
ADDED : ஏப் 28, 2024 03:38 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டி, செல்லம்பட்டியில் அ.தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் துவக்கவிழா முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது. தேனி வேட்பாளர் நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரன், செல்லம்பட்டி நிர்வாகிகள் ராஜா, ரகு, மகேந்திரபாண்டி, உசிலம்பட்டி நிர்வாகிகள் பூமாராஜா, துரைதனராஜ், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் பங்கேற்றனர்.
உதயகுமார் கூறியதாவது: வெப்பச் சலனம் அதிகமாக உள்ளதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். வேலை நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். அதை விடுத்து பொத்தாம் பொதுவாக மக்கள் வெளியே வரவேண்டாம் என கூறிவிட்டு முதல்வர் ஸ்டாலின் துாங்குகிறார். வெளியே வரவில்லையென்றால் வாழ்வாதாரத்திற்கு மக்கள் என்ன செய்வார்கள் என்றார்.

