ADDED : ஜூலை 27, 2024 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி 128 ஆக்கிரமிப்பு வீடுகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.
இங்குள்ள குருவித்துறை ரோட்டில் போக்குவரத்து மற்றும் சாலையை அகலப்படுத்துவதற்கு இடையூறாக இருபுறமும் சாலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இதனால் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து தனிநபர் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. பல்வேறு எதிர்ப்புகளை தொடர்ந்து நேற்று கலெக்டர் சங்கீதா உத்தரவில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராதா முத்துக்குமாரி, இளநிலை பொறியாளர் கணேஷ் பாபு முன்னிலையில் போலீசார் பாதுகாப்புடன் 128 ஆக்கிரமிப்பு வீடுகளை மணல் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றினர்.