ADDED : செப் 07, 2024 05:37 AM
மேலுார்: மேலுாரில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட நிலையில் வெளியூர் பஸ் ஸ்டாப் சேதமுற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலுாரில் தாலுகா அலுவலகம் வெளியே பயன்பாட்டில் உள்ள இந்த பஸ் ஸ்டாப்பில் வெப்பம் தாக்காதவாறு பாலிகார்பனேட் ஷீட் மூலம் மேற்கூரையும், சோலார் பேனல் அமைத்து மின்சாரம் இன்வெட்டரில் சேமிக்கப்பட்டு பேன் லைட் இயங்கும் வகையில் வைபை வசதியுடன் அமைக்கப்பட்ட நிலையில் 13 மாதங்களில் சேதமடைந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திறப்பு விழா செய்து 17 நாட்களில் பஸ் ஸ்டாப்பிற்குள் மழை நீர் வடிந்தது. நகராட்சி நிர்வாகத்தினர் மேற்கூரையில் தண்ணீர் கசியாதவாறு ஷீட் போட்டு ஒட்டினர். மேலும் வைபை வசதி செயல்பாடில்லை. தற்போது சேர்கள், மீட்டர் பெட்டி உடைந்து மின்வயர்கள் வெளியே தெரிகிறது. பஸ் ஸ்டாப் அசுத்தமாக இருப்பதால் மக்கள் வெளியே வெயிலில் காத்து கிடக்கின்றனர் என்றனர்.
நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் கூறுகையில், ''பழுதுகள் குறித்து ஒரு வாரத்திற்குள் சரி செய்ய ஒப்பந்ததாரர் இஸ்மாயிலுக்கு தெரியப்படுத்தி உள்ளேன். தவறினால் பிடிமான தொகையில் இருந்து நகராட்சி சார்பில் சரி செய்யப்படும் என்றார்.