தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் விலக்கு கோரிக்கை

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் விலக்கு கோரிக்கை

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் விலக்கு கோரிக்கை


ADDED : ஜூன் 23, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 07:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நகர் குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் மதிபாரதி தலைமையில் நடந்தது. செயலாளர் பாலமுருகன், துணைத் தலைவர்கள் பரமசிவம், செல்லம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

மகாத்மா காந்தி நுாறுநாள் வேலைத் திட்டத்தின் பெயரை வி.பி.ஜி.ராம்ஜி எனப் பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து ஜூலை 1ல் கருப்புக் கொடியேந்தி போராட்டம் நடத்துவது, மாத உதவித் தெகைக்காக 2 ஆண்டுகளாக காத்திருப்போருக்கு வருவாய்த்துறையினர் உடனே அதை வழங்க வேண்டும்.

ஆகஸ்டில் தொடங்க உள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில், எந்தத்துறை பணியிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முழுவிலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us