ADDED : மே 28, 2024 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம், : தேனி கம்பம்மெட்டுப் பகுதியை சேர்ந்தவர் அப்துல்வகாப் 70. நேற்று காலை அப்துல்வகாப்பை குடும்பத்தினர் அடிவாரத்தில் இருக்க செய்துவிட்டு திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்ஹாவிற்கு சென்றனர்.
சிறிது நேரத்தில் அப்துல்வகாப் மலைமேல் சென்றார். நெல்லித்தோப்பு பகுதியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினார்.
அதை பார்த்த மலைமேல் சென்ற மற்றவர்கள் தகவலின்பேரில் திருப்பரங்குன்றம் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மீட்டு '108' ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.