ADDED : ஜூன் 26, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுார் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் பஞ்சாபிகேசன் தலைமையில் தாசில்தார் முத்துபாண்டியன் முன்னிலையில் ஜமாபந்தி நடந்தது.
ஜூன் 12 முதல் 25 வரை நடந்த முகாமில் மக்களிடம் 940 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் பட்டா, சிட்டா மாறுதல், விதவை மற்றும் முதியோர் உதவித்தொகை கேட்ட 120 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது.