ADDED : மே 18, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் விழித்திரை புற்றுநோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மனித சங்கிலி, ஊர்வலம் நடந்தது.
அண்ணா பஸ்ஸ்டாண்ட் முன்பு போலீஸ் துணை கமிஷனர் வனிதா துவக்கி வைத்த ஊர்வலம் அரவிந்த் கண் மருத்துவமனை வரை நடந்தது. மூத்த டாக்டர் உஷாகிம் முன்னிலை வகித்தார். 200க்கும் மேற்பட்ட புற்றுநோய் பாதிப்பில் மீண்டவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வழிகாட்டி, விழிப்புணர்வு, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
அரவிந்த மருத்துவமனையில் ‘ரிங்காப்’ திட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்து 601 பேருக்கு இச்சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை தலைவர் டாக்டர் ரவீந்திரன் உட்பட பலர் பேசினர். ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் ராமநாதன், ரெஜிதா, சித்ரா உட்பட பலர் செய்திருந்தனர்.
