ADDED : ஜூன் 10, 2026 10:51 PM
மதுரை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகத்தின் மதுரை கிளையின் மாதாந்திர பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.
பேராசிரியர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அனார்கலி வரவேற்றார். பேராசிரியர் ஆனந்தன் கருவூல அலுவலகத்தில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டது குறித்து பேசினார். பொருளாளர் சந்திரன் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார்.
பொதுச் செயலாளர் பெரியதம்பி, பேராசிரியர் மனோகரன் உட்பட பலர் பேசினர். பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், ஜெகநாதன், லட்சுமணன், ராஜேந்திரன், அரவிந்த் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
புதிய அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். 60 ஆண்டுகளாக பின்பற்றும் இருமொழிக் கொள்கையையே தொடர்ந்து பின்பற்ற புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விழாக்களிலும் தமிழை முதல் பாடலாகவும், தேசிய கீதத்தை இறுதியிலும் பாட வேணடும். மதுரை காமராஜ் பல்கலையில் மீண்டும் செனட் சபையில் பட்டதாரிகளுக்கான தேர்தலை நடத்த அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
