ADDED : ஜூன் 22, 2026 07:20 PM

அ நிறம் | அளவு
மேலுார்: இ.மலம்பட்டி பகுதியில் ஒரு வாரத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் 3 நாட்களுக்கு முன் பெய்த சூறாவளி மழைக்கு நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன. ஒரு வாரத்திற்கு தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் அழுகுவதோடு முளைத்து வீணாகிவிடும்.
விவசாயிகள் கூறியதாவது: அறுவடை நேரத்தில் பயிர்கள் சாய்ந்ததால் நெல் மணிகள் வயலில் உதிர ஆரம்பித்துள்ளன. அதனால் குறைவான மகசூல் கிடைக்கும். ஏற்கனவே கதிர் அறுவடை செய்யும் இயந்திரத்திற்கு ரூ.3 ஆயிரம் வாடகை வாங்கிய நிலையில் தற்போது ரூ.6 ஆயிரம் கேட்கின்றனர். வேளாண் பொறியியல் துறை கதிர் அறுவடை இயந்திரம் குறைந்த வாடகைக்கு தர வேண்டும். அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிப்புக்கேற்ப வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
