ADDED : மே 14, 2024 06:14 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி வார்டு 22 அண்ணாநகர் தெருவில் சிமென்ட் ரோடு அமைப்பதற்காக ரோட்டை தோண்டி ஆறுமாதங்களாக பணியை கிடப்பில் போட்டனர்.
ரோட்டையும், கழிவு நீர் கால்வாயையும் சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள், வார்டு கவுன்சிலர் லின்சி, ஓ.பி.எஸ்., அணி நகர் செயலாளர் சசிக்குமார் இணைந்து பேரையூர் ரோட்டில் முட்செடிகளை போட்டு ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
நகராட்சி பொறியாளர் பட்டுராஜன், உசிலம்பட்டி போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் ரோடு சீரமைத்து தரப்படும் என சமாதானம் செய்தனர். மறியலால் காலை 10:40 முதல் 11:00 மணிவரை 20 நிமிடங்கள் பேரையூர் ரோட்டில் போக்குவரத்து பாதித்தது.
