ADDED : ஆக 14, 2024 12:55 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் நெடுஞ்சாலையோரம் வளர்ந்த முட்செடிகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
எழுமலை, சாப்டூர், டி.கல்லுப்பட்டி, எம்.சுப்புலாபுரம், உசிலம்பட்டி நெடுஞ்சாலைகளில் இருபுறமும் அதிகமான முட்செடிகள் வளர்ந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதையடுத்து பேரையூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பணியாளர்களைக் கொண்டு சாலையோரம் வளர்ந்த முட்செடிகளை வெட்டி அகற்றும் பணி நடந்தது. இந்தச் சாலையில் உள்ள பாலங்களில் பராமரிப்பு பணிகளும் நடந்தது. உதவி கோட்ட பொறியாளர் முத்துஈஸ்வரன், இளநிலை பொறியாளர் சுந்தர்ராஜன் ஆய்வு செய்தனர்.
