ADDED : ஏப் 02, 2024 06:29 AM

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் - - ஊமச்சிகுளம் ரோட்டில் பண்ணைக்குடி அருகே உள்ள அபாய கிணறில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாடிப்பட்டி நான்கு வழிச்சாலை சந்திப்பு முதல் சிட்டம்பட்டி வரை அவுட்டோர் ரிங் ரோடு நான்கு வழிச்சாலைக்கான பணி நடக்கிறது.
கட்டுமான பணி நடக்கும் பகுதியைச் சுற்றி வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையோரம் உள்ள தரைமட்ட கிணறுக்கு பச்சை நிறத்திலான துணியை வேலியாக அமைத்துள்ளனர்.
குண்டும் குழிகள் நிறைந்த, இரவில் மின் விளக்குகள் இல்லாத இருள் சூழ்ந்த இந்த ரோட்டில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
மேய்ச்சலுக்கு செல்லும் கிடை மாடுகள், ஆடுகள் கிணற்றுக்குள் விழுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. எனவே கிணற்றை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடாக தடுப்பு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
