ADDED : செப் 05, 2024 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி, : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா முதல்வர் சந்திரன் தலைமையில் நடந்தது. துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார்.
மாணவி அர்ச்சனா வரவேற்றார். ரோட்ராக்ட் கிளப் தலைவராக பூஜா, செயலாளராக சண்முகராஜ் பதவி ஏற்றனர். மதுரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஞானகுகன், சண்முகவேல், சுதர்சன், ரகுமான் கலந்து கொண்டனர். மாணவி பாண்டிமீனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மாணவர் முத்துகுமார் நன்றி கூறினார். பேராசிரியர்கள் கோபாலசுந்தர், சர்வேஸ்வரன் ஒருங்கிணைத்தனர்.