/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரவுடி 'ஐகோர்ட்' மகாராஜா கைது துப்பாக்கி, அரிவாள் பறிமுதல்
/
ரவுடி 'ஐகோர்ட்' மகாராஜா கைது துப்பாக்கி, அரிவாள் பறிமுதல்
ரவுடி 'ஐகோர்ட்' மகாராஜா கைது துப்பாக்கி, அரிவாள் பறிமுதல்
ரவுடி 'ஐகோர்ட்' மகாராஜா கைது துப்பாக்கி, அரிவாள் பறிமுதல்
ADDED : ஜூலை 31, 2024 10:30 PM

மதுரை,:மதுரை எஸ்.எஸ்.காலனி மைதிலி ராஜலட்சுமி. கடன் பிரச்னையில் இவரது பத்தாம் வகுப்பு படிக்கும் மகனை ஜூலை 11ல் கடத்தி 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர். இவ்வழக்கில் துாத்துக்குடி ரவுடி 'ஐகோர்ட்' மகாராஜா, ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மனைவி சூர்யா, டிஸ்மிஸ் போலீஸ்காரர் செந்தில்குமார் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மகாராஜா, சூர்யா தவிர மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த சூர்யா, ஜூலை 21ல் குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் துாத்துக்குடியில் அம்மாவட்ட தனிப்படை போலீசாரால் 'ஐகோர்ட்' மகாராஜா கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன் துாத்துக்குடி சிறையில் இருந்து வழக்கு விசாரணைக்கு ஆஜாராக நீதிமன்றத்திற்கு நகர் போலீசார் அழைத்துச் சென்றபோது தப்பிச்சென்றார். அந்த வழக்கில்தான் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் கைத்துப்பாக்கி, அரிவாள், கயிறு பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது இடது கையில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இவரை மாணவர் கடத்தல் வழக்கிலும் கைது செய்ய உள்ளதாக போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.
எஸ்.ஐ., முதலான அதிகாரிகள் அனைவரும் துப்பாக்கியுடன் ரோந்து செல்ல வேண்டும். துப்பாக்கி சுட பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும் என சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மகாராஜாவை கைது செய்தபோது அவர் துப்பாக்கி வைத்திருந்தார். நல்ல வேளையாக அசம்பாவிதம் நடக்கவில்லை.
முன்னெச்சரிக்கையாக இனி ரவுடிகளை கண்காணிக்க செல்லும்போது, ரவுடிகள் வசிக்கும் பகுதிகளில் ரோந்து செல்லும்போதும் துப்பாக்கியுடன் ரோந்து செல்ல வேண்டும் என தென்மாவட்ட போலீசாருக்கு தென்மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.