/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உறிஞ்சு குழியில் வைக்கோல் கட்டுகள் கழிவுநீரால் ரூ.1.27 லட்சம் வீண்
/
உறிஞ்சு குழியில் வைக்கோல் கட்டுகள் கழிவுநீரால் ரூ.1.27 லட்சம் வீண்
உறிஞ்சு குழியில் வைக்கோல் கட்டுகள் கழிவுநீரால் ரூ.1.27 லட்சம் வீண்
உறிஞ்சு குழியில் வைக்கோல் கட்டுகள் கழிவுநீரால் ரூ.1.27 லட்சம் வீண்
ADDED : செப் 08, 2024 04:38 AM
சோழவந்தான்: வாடிப்பட்டி ஒன்றியம்இரும்பாடியில் கழிவுநீரை துாய்மைப்படுத்த அமைத்த உறிஞ்சு குழியில் வைக்கோல் கட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
நீர் நிலைகளில் கழிவுநீர் கலக்கக் கூடாது என்பதற்காக ஊரக வளர்ச்சித் துறை கழிவு நீர் மேலாண்மை திட்டத்தில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்படுகின்றன. இரும்பாடி ஊராட்சி ஏ.டி.,காலனியில் 2022ல் செங்குத்து வகை கழிவுநீர் உறிஞ்சு குழி ரூ.1.27 லட்சத்தில் அமைக்கப்பட்டது.
இதனை பிளாஸ்டிக் பாலிதீன் கழிவுகள் ஆக்கிரமித்து இருந்தன. ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் உறிஞ்சு குழிக்கு செல்லாமல் அருகே உள்ள தோப்புக்குள் செல்ல புதிய வடிகால் கட்டியுள்ளது. இதனால் அரசின் நிதி, திட்டத்தின் நோக்கம் வீணடிக்கப்பட்டுள்ளதுடன், கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகின்றன. சிலர் உறிஞ்சு குழியில் வைக்கோல் கட்டுகளை வைத்துள்ளனர். ஒன்றிய நிர்வாகம் உறிஞ்சு குழியை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.