ADDED : ஆக 05, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு முதலியார் கோட்டை வடக்கு தெருவில் உள்ள கிராம சாவடியில் ரேஷன் கடை செயல்படுகிறது. இங்கு 900க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். 1960களில் கட்டப்பட்ட இக்கிராம சாவடியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன் கடை செயல்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.
நேற்று முன்தினம் இரவு கட்டடத்தின் முன்பக்க முகப்பு பகுதி சுவர் பூச்சுகள் முழுவதுமாக பெயர்ந்து கீழே தெருவில் விழுந்துள்ளது. இரவு நேரத்தில் விழுந்ததால் விபத்து விபரீதம் எதுவும் ஏற்படவில்லை. இது போன்ற வாடகை கட்டடங்களில் செயல்படும் ரேஷன் கடைகளின் தரத்தை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.