/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் போராட்டம் துவக்கம் ஒன்றியங்களில் பணிகள் பாதிப்பு

ADDED : ஆக 23, 2024 04:45 AM

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களின் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தால் ஒன்றிய பணிகள் பாதித்தன.
அரசின் கலைஞர் கனவு இல்லம் உட்பட வீடு கட்டும் திட்டங்களுக்கு உரிய அலுவலர்கள் கட்டமைப்பு வேண்டும், ஊராட்சி செயலாளர், அலுவலக உதவியாளர்கள் உட்பட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் சிறுவிடுப்பு போராட்டத்தை ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர்கள் அறிவித்தனர். அதன்படி நேற்று இப்போராட்டம் துவங்கியது.
மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் நேற்று ஒட்டுமொத்த விடுப்பு எடுத்தனர். இதனால் கிராமங்கள், ஒன்றிய அலுவலகங்களில் பணிகள் பாதித்தன. மாவட்ட தலைவர் சந்திரசேகர், செயலாளர் அமுதரசன் கூறுகையில், ''அரசின் வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு ஒன்றிய, மாவட்ட அளவில் அலுவலர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். கிராமங்கள், ஒன்றியங்களில் அலுவலர்கள் பணிப்பளுவால் சிரமப்படுகின்றனர்.
எனவே காலியிடங்களை நிரப்ப வேண்டும். தீர்வு கிடைக்காவிடில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து மாநில தலைமை அறிவிக்கும்'' என்றனர். இன்றும் இப்போராட்டம் நீடிக்கிறது.