/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மத்திய சிறையில் ஆடிப்பெருக்கு விற்பனை
/
மத்திய சிறையில் ஆடிப்பெருக்கு விற்பனை
ADDED : ஆக 04, 2024 04:40 AM
மதுரை: தமிழகத்தில் முன்மாதிரி சிறைச்சந்தை மதுரை மத்திய சிறையில் உள்ளது.
கைதிகள் மூலம் தயாரிக்கப்படும் இனிப்பு, காரம், எண்ணெய் வகைகள் மட்டுமின்றி அவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் கட்டில், டைனிங் டேபிள், பீரோ மற்றும் மர அலங்கார வேலைப்பாடு, இரும்பு பொருட்கள் விற்பனை நடக்கிறது. மக்களின் விருப்பத்திற்கேற்ற வடிவங்களில் மர வேலைப்பாடுகளுடன் கூடிய பொருட்கள் தயாரித்து வழங்கப்படுகிறது.
அலங்காநல்லுார் பெரிய குலசையைச் சேர்ந்த தமிழினியன், சக்தி தம்பதியின் புது வீடு கட்டுமானத்திற்கு நிலை, கதவு, மர ஜன்னல்கள் இங்கு தயாரிக்கப்பட்டன. அவற்றை சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி, கண்காணிப்பாளர் சதீஷ்குமார் விற்பனை செய்தனர்.
அதிகாரிகள் கூறியதாவது: தஞ்சாவூர்
தம்பதி தங்கள் மகளின் திருமண சீர்வரிசை பொருட்களை இங்கு கொள்முதல் செய்தனர்.
மதுரை, தேனியில் நடக்கும் திருமணத்திற்கான சீர்வரிசை பொருட்கள் தயாரிக்க ஆர்டர் பெறப்பட்டுள்ளது.
வாய்ப்பினை மக்கள் பயன்படுத்தி தரமான பொருட்களை பெறலாம் என்றனர்.