/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தர்ப்பணத்திற்கு பிளாஸ்டிக் பைகள் விற்பனை அறநிலையத்துறை நடவடிக்கை தேவை
/
தர்ப்பணத்திற்கு பிளாஸ்டிக் பைகள் விற்பனை அறநிலையத்துறை நடவடிக்கை தேவை
தர்ப்பணத்திற்கு பிளாஸ்டிக் பைகள் விற்பனை அறநிலையத்துறை நடவடிக்கை தேவை
தர்ப்பணத்திற்கு பிளாஸ்டிக் பைகள் விற்பனை அறநிலையத்துறை நடவடிக்கை தேவை
ADDED : ஆக 02, 2024 05:07 AM
மதுரை: ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யும் பக்தர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுகிறது. அறநிலையத்துறை கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க மாநில துணைத் தலைவர் சுந்தர வடிவேல் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது: முன்னோரை நினைவு கூர்ந்து வழிபாடு செய்யும் நாட்களில் ஆடி அமாவாசை முக்கிய நாள். இந்நாளில் கடல், ஆறு, குளம் உள்பட நீர்நிலைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யும் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில் குளங்களில் தர்ப்பணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக தர்ப்பணம் கொடுப்பது பக்தர்களிடம் பணம் சுரண்டும் நிகழ்வாகவும், சுற்றுச் சூழலை பாதிக்கும் விதமாகவும் உள்ளது. தர்ப்பணத்திற்கு தேவையில்லாத பொருட்களை கோயில் வளாகத்திலுள்ள கடைகளில் பூஜை பொருட்களுடன் விற்பனை செய்கின்றனர்.
தடை செய்த பிளாஸ்டிக் பைகள் அமாவாசை நாளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு கோயில் வளாகத்தையும், குளத்தையும் பாதிக்கும் சூழலை உருவாக்குகிறது. புரோகிதர்கள் கட்டாய கட்டணம் வசூலிப்பதால் பக்தர்கள் பாதிப்படைகின்றனர். கோயில் அதிகாரிகள் கண்டும் காணாமலும் உள்ளனர்.
அறநிலையத்துறை கமிஷனர் பக்தர்கள் மீது நடத்தப்படும் பணச் சுரண்டல்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.