/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளி அருகே தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
/
பள்ளி அருகே தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
ADDED : ஜூலை 23, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் பேரூராட்சி பேட்டை பகுதி அரசு நடுநிலை பள்ளி அருகே தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
சோழவந்தான் - பள்ளபட்டி ரோட்டில் உள்ள இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பள்ளப்பட்டி ரோட்டில் உள்ள பாலத்தின் கீழாக கடந்து வைகை ஆற்றுக்கு செல்ல வாய்க்கால் உள்ளது. ஆனால் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் பள்ளி அருகேயும், உட்புறமும் தேங்குகிறது.
இதனால் மாணவர்களுக்கு சுகாதார பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.