ADDED : மே 13, 2024 06:31 AM

மதுரை: மதுரை எஸ்.எஸ். காலனி ஸத்சங்கம் கோயிலில், சங்கரர், ராமானுஜர் ஜெயந்தியை முன்னிட்டு, காலை 7:30 மணி முதல் ஆசிரியர் பிரகாஷ் தலைமையில் வேத விற்பனர்களின் உபநிஷத் பாராயணம், சிறப்பு அர்ச்சனை நடந்தன.
ராமானுஜருக்கு சிவராமகிருஷ்ணன் அய்யங்காரின் சிறப்பு அந்தாதி பாராயணம் நடந்தது. சுவாமிக்கு மகா தீபாராதனை, நைவேத்யம் நடந்தது. சங்கப் பொருளாளர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் சந்திரசேகர், ஜனார்த்தன் பங்கேற்றனர். பக்தர்களுக்கு நீர்மோர், பிரசாதம் வழங்கப்பட்டன. செயலாளர் ஸ்ரீராமன் ஏற்பாடு செய்தார்.
* மதுரை பெசன்ட் ரோடு காஞ்சி காமகோடி பீடத்தில் ஆதிசங்கர பகவத் பாதாள் விக்ரஹத்துக்கு நாமாவளி, ஸ்தோத்ரங்களுடன் சிறப்பு புஜை அலங்காரம் தீபாராதனை உபநிஷத் பாராயணம் நடந்தது.
மாலையில் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பகவத் பாதாள் பற்றி சொற்பொழிவாற்றினார். ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் குமார், ராமகிருஷ்ணன், ராமன், பரத்வாஜ் ராதாகிருஷ்ணன் சங்கர்ராமன் பங்கேற்றனர்.
* சோழவந்தான் முள்ளிப்பள்ளம் கிளை சார்பில் தினமும் காலை ஆதிசங்கர பகவத் பாதர் படத்திற்கு பூஜை தீபாராதனை நடந்தது. குழந்தைகளுக்கான ஆன்மிக பண்பு பயிற்சி முகாமை லதா, பிரேமலதா ஆகியோர் நடத்தினர். ஆதிசங்கரின் 2533வது ஜெயந்தியை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் தொடங்க பெற்று கோசாலைக்கு பூமி பூஜையும் நடந்தது.
ஆதிசங்கருக்கு சிறப்பு பூஜைகள், உபநிஷத் பாராயணம், தீபாராதனை சுவாசினி பூஜைக்குப்பின், மாணவர்களின் ஆன்மிக கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகி இன்ஜினியர் ஸ்ரீகுமார், டாக்டர் ரமேஷ் செய்திருந்தனர்.