ADDED : ஜூலை 15, 2024 05:01 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை ஒத்தக்கடை அழகப்பன் நகரில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
ஊராட்சித் தலைவர் முருகேஸ்வரி தலைமை வகித்தார். பவுண்டேஷன் ஆலோசகர் பிரபு முன்னிலை வகித்தார். உறுப்பினர் கார்த்திகேயன் வரவேற்றார். மதுரை அரசு மருத்துவமனை கதிரியக்க இயற்பியல் டாக்டர் செந்தில் குமார் பங்கேற்று, 'சுற்றுச்சூழல், கதிரியக்க செயல்பாடுகள், ஓசோன் படலம்' குறித்து பேசினார்.
பவுண்டேஷன் சார்பில் டாக்டர் செந்தில் குமாருக்கு 'நவீன தாமஸ் ஆல்வா எடிசன் விருது'வழங்கப்பட்டது. வேம்பு, செர்ரி, புங்கை மரங்களை நடப்பட்டது. ஆலோசகர் ராகேஷ், சிலம்பம் மாஸ்டர் பாண்டி, சிவா , பாஸ்கரன் சமூக ஆர்வலர்கள் மோகன், ரங்கநாதன், செல்வி, ரமேஷ், ஓய்வு தலைமை ஆசிரியர் ராகவன், ஸ்டெல்லா மேரி, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
