/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி மருத்துவமனைகளில் காட்சிப்பொருளான ஸ்கேன்கள் டெக்னீசியன், டாக்டர் இல்லை

ADDED : மார் 05, 2025 05:43 AM
மதுரை: மதுரை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மையங்களில் ஸ்கேன் வசதி இருந்தும் 2 ஆண்டுகளாக டெக்னீஷியன்கள், டாக்டர்கள் இல்லாததால் அவை காட்சிப்பொருளாக கிடக்கின்றன.
மாநகராட்சியில் 33 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. 2 ஆண்டுகளுக்கு முன் 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்'கள் வழங்கப்பட்டன. கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்ய அதிகம் பயன்படும். ஸ்கேன் செயல்படாததால் பெரும்பாலும் தனியார் சென்டர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ.பல ஆயிரம் வரை அவர்கள் செலவிட வேண்டியுள்ளதாக புலம்புகின்றனர். அதேநேரம் புதிய ஸ்கேன்கள் பயன்படுத்தாமலேயே முடங்கிக் கிடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்கேனை இயக்க டெக்னீசியன்கள், ஸ்கேன் ரிப்போர்ட் வழங்க ரேடியோலஜிஸ்ட் இல்லை. இதுகுறித்து அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இதனால் ரூ.பல லட்சத்தில் புதிதாக வாங்கப்பட்ட ஸ்கேன்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தற்காலிகமாக கீழமாசி வீதியில் மாநகராட்சி ஸ்கேன் சென்டர் செயல்படுகிறது. அங்கு சென்று இலவசமாக ஸ்கேன் எடுத்துக்கொள்ளலாம். இதனால் ஸ்கேன் வசதிக்காக கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் தேவையின்றி அலைக்கழிக்கப்படுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.