
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா தாளாளர் காசிமாயன் தலைமையில் நடந்தது.
இயக்குனர் ஜெயகிஷோர் குமார் வரவேற்றார். ஆச்சி டிரஸ்ட் நிர்வாகிகள் பிரேமா, ரம்யவர்ஷினி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற இஸ்ரோ பொதுமேலாளர் குணசேகரன் பங்கேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முதல்வர் பாஸ்டின்குமார் நன்றி கூறினார்.

