தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பராமரிப்பு இல்லாத பள்ளிக் கட்டடங்கள்

பராமரிப்பு இல்லாத பள்ளிக் கட்டடங்கள்

பராமரிப்பு இல்லாத பள்ளிக் கட்டடங்கள்


ADDED : ஜூலை 12, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் ஊராட்சி, கள்ளர் பள்ளிகளில் பழைய கட்டடங்கள் அகற்றப்படாமலும், சுற்றுச்சுவர் சீரமைக்கப்படாமலும் உள்ளன.

உசிலம்பட்டி அருகே கீரிபட்டி அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் உள்ள 2 கட்டடங்கள் பழுதடைந்துள்ளன. கட்டடத்தின் மேற்பகுதியில் உள்ள கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்து விழுவதால் மாணவர்களை வேறு வகுப்பறையில் வைத்து பாடம் நடத்துகின்றனர். பழுதடைந்த நிலையில் உள்ள 2 கட்டடங்களையும் அகற்றி விட்டு புதிய கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதே போல் போத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர்கள் சேதமடைந்துள்ளன. பள்ளியின் முன்பும் சுற்றுச்சுவர் சேதமடைந்து, கதவு அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் ஒரு பக்க கதவு மட்டும் உள்ளது. பள்ளி வளாகம் பாதுகாப்பு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சுற்றுச்சுவரையும், கதவையும் சரிசெய்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us