sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளி, கல்லுாரி செய்திகள்

/

பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்


ADDED : மார் 28, 2024 06:24 AM

Google News

ADDED : மார் 28, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டமளிப்பு விழா

மேலுார்: கிடாரிப்பட்டி லதாமாதவன் கலை அறிவியில் கல்லுாரி பட்டமளிப்பு விழா சேர்மன் மாதவன் தலைமையில் நடந்தது. மதுரை காமராஜ் பல்கலை டீன் கண்ணதாசன் 213 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முதல்வர் முருகன், துணை முதல்வர் ரமேஷ், செயல் அலுவலர்கள் முத்துமணி, காந்திநாதன், பி.ஆர்.ஓ., பிரபாகரன் கலந்து கொண்டனர். டீன் ஹேமலதா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

மாணவியர் 'விசிட்'

மதுரை: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பத் துறை மாணவியர் கோவை ஆடைத்தொழிற்சாலையை பார்வையிட்டனர். இதன் மூலம் மாணவிகள் முழு தானியங்கி இயந்திரங்களின் செயல்பாடுகள், ஆடை வடிவமைத்தல், மாதிரி தயாரித்தல், தரப்படுத்துதல், தைக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

ஆசிரியர்கள் நிதியுதவி

மதுரை: டி.கல்லுப்பட்டி அருகே கொல்லவீரம்பட்டி மகேஸ்வரி. இவரது கணவர் இறந்துவிட்டார். வறிய நிலையில், அவரது மகன் ஜோதிராகவ் கல்லுாரியில் சேர இயலாத நிலையில் தவித்தார். கல்லுப்பட்டி நண்பர்கள் வட்டாரம் அமைப்பினர் தலைவரான முன்னாள் தலைமை ஆசிரியர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் விஜயபார்த்திபன், அன்பாலயா பவுண்டேஷன் நிறுவனர் சக்தி ஆகியோர் ஒத்தக்கடை வேளாண் பல்கலை கல்லுாரியில் முதல், 2ம் செமஸ்டருக்கு கல்வி கட்டணமாக ரூ.20 ஆயிரத்து 700ஐ அளித்தனர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

திருமங்கலம்: நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி திருமங்கலம் பி.கே.என்., ஆண்கள் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. உதவி தேர்தல் நடக்கும் அலுவலர் சாந்தி தொடங்கி வைத்தார். தலைமையாசிரியர் மாரிராஜன், மண்டல துணை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், துணை தாசில்தார்கள் செந்தில் குமார், மாதவன், வருவாய் ஆய்வாளர்கள் சந்திரலேகா, அசோக் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் மாரத்தான்

திருமங்கலம்: நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி திருமங்கலம் மெப்கோ பள்ளி மாணவர்களின் மாரத்தான் ஓட்டம் நடந்தது. முதல்வர் ஈஸ்டர் ஜோதி, தாசில்தார் மனேஷ் குமார், மண்டல துணை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் சந்திரலேகா, வி.ஏ.ஓ.,க்கள் பாலமுருகன், ஆனந்த், செந்தில் குமரன், குருசாமி, ராஜா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கு

மதுரை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் காந்தியின் பவளவிழா ஆண்டையொட்டி அவர் காண விரும்பிய சமுதாயம் எனும் தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. காந்தி மியூசியம், காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடுகளை செய்தன. உதவி பேராசிரியர் மாரிசெல்வம் வரவேற்றார். மியூசிய செயலாளர் நந்தாராவ் துவக்கி வைத்தார். முதல்வர் தேன்மொழி தலைமை வகித்தார். நிறுவன முதல்வர் தேவதாஸ், உதவி பேராசிரியை அனிதா, எழுத்தாளர் அழகர்சாமி, வழக்கறிஞர் கமல்ஆனந்த், தேசிய வலிமை சுவாமிநாதன், ஜவஹர்லால் ஆகியோர் பேசினர். உதவி பேராசிரியர் பாண்டியன் நன்றி கூறினார்.

பறவைகள் கண்டறிதல் முகாம்

மதுரை: தியாகராஜர் மேலாண்மை கல்லுாரியின் பசுமை முயற்சியின் ஒரு பகுதியாக பறவைகளை கண்டறியும் முகாம் நடந்தது. உள்தர மதிப்பீட்டு கவுன்சில் ஏற்பாடு செய்தது. இணைப் பேராசிரியர் செந்தில், 20 மாணவர்களைக் கொண்ட குழுவினர் பறவைகளைக் கண்டறிந்தனர். குயில்கள், மீன்கொத்திகள், மரங்கொத்திகள், சிலம்பன்கள், ஈப்பிடிப்பான்கள், மலர் கொத்திகள், தேன் சிட்டுக்கள், நாகணவாய்கள், கரிச்சான்கள், சிறிய நீர்க்காகம், குருகுகள், கொக்குகள், சிறிய நாரைகள், சின்னக் கொக்கு, குருட்டுக் கொக்கு, வைரி ஆகியவை அடையாளம் காணப்பட்டன.

அறிவியல் கண்காட்சி

மதுரை: திருஞானம் துவக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி பள்ளி தலைவர் சுரேந்திரன் பாபு தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சரவணன் வரவேற்றார். தாளாளர் சங்கீத்ராஜ் துவக்கி வைத்தார். மாணவர்களின் படைப்புகளை ஆசிரியர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர். ஆசிரியை பாக்கியலட்சுமி ஏற்பாடு செய்தார். பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கருத்தரங்கு

மதுரை: யாதவர் கல்லுாரியில் கணிதத்துறை சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வெற்றிக்கான வழிகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கு முதல்வர் ராஜூ தலைமையில் நடந்தது. செயலாளர் கண்ணன், இயக்குநர் ராஜகோபால் முன்னிலை வகித்தனர். முன்னாள் செயலாளர் நவநீதகிருஷ்ணன், அழகப்பா பல்கலை பேராசிரியர் பாலசுந்தர் தேர்வில் பெற்றிபெறும் உத்திகள் குறித்து பேசினர். மாணவி சுஜிதா வரவேற்றார். துறைத் தலைவர் அழகப்பன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவி கலைவாணி நன்றி கூறினார்.

பட்டமளிப்பு விழா

மதுரை: சிங்காரதோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கே.ஜி., மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா தெற்கு வட்டாரக் கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் தலைமையில் நடந்தது. மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். தலைமையாசிரியர் ஜோசப் ஜெயசீலன் வரவேற்றார். நன்கொடையாளர் ராஜூ, ஆசிரியர் ஜெயமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிறைவு விழா

மதுரை: மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் மாணவிகள் பேரவை நிறைவு விழா முதல்வர் வானதி தலைமையில் நடந்தது. தமிழாய்வுத் துறை தலைவர் யாழ் சந்திரா வரவேற்றார். அமெரிக்கன் கல்லுாரி இணை பேராசிரியை லுார்து இமாகுலேட் மாணவிகள் தலைமைப்பண்புகளை எவ்வாறு வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார். பல்வேறு துறைகளின் மன்றங்கள் சார்பில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பேரவை தலைவி ரம்யா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us