sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளி, கல்லுாரி செய்திகள்

/

பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்


ADDED : ஜூன் 11, 2024 06:38 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேர்க்கை விழா கொண்டாட்டம்


மதுரை: எல்.கே.பி.,நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவர்களை பறை இசைத்து, சிலம்பம் சுழற்றி, இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர். பல்வேறு சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் பானு, ஆசிரியர்கள் விஜயலட்சுமி, அனுசியா, மனோன்மணி, சித்ரா, தமிழ்ச்செல்வி, அகிலா அம்பிகா, சுகுமாறன், அருவகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* மதுரை கிழக்கு ஒன்றியம் கார்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியை சிவகாசசுந்தரி தலைமை வகித்தார். இனிப்பு பொங்கல், பூக்கள் வழங்கி மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவர் சேர்க்கை குறித்து ஆசிரியர்கள் முருகன், அன்னலட்சுமி, அன்பு, கலைவாணி, அனுராதா, கிராம தலைவர்கள் முத்துசாமி, அழகர்சாமி, பி.டி.ஏ., எஸ்.எம்.சி., நிர்வாகிகள் உள்ளிட்டோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

* புதுார் அல்அமீன் மேல்நிலைப் பள்ளியில் நிர்வாகி ஹாஜி முகமது இஸ்திரி, தலைமையாசிரியர் ேஷக் நபி தலைமை வகித்தனர். மாணவர்கள் பூங்கொத்து, இனிப்பு கொடுத்து வரவேற்கப்பட்டனர். பாடப் புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர்கள் ஜாகிர் உசேன், ரஹ்மத்துல்லா உள்ளிட்டோர் செய்தனர்.

ஆதார் முகாம் துவக்கம்


கொட்டாம்பட்டி: அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் முகாம் நடந்தது. ஆசிரியர் தாரணி தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். முகாமில் மாணவர்களுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்யப்பட்டன. ஏற்கனவே எடுத்த மாணவர்களுக்கு தவறுகள் திருத்தம் செய்யப்பட்டது.

உசிலம்பட்டி : எஸ்.டி.ஏ., பள்ளியில் மாணவர்களுக்கு வசதியாக ஆதார் சிறப்பு முகாம் துவங்கியது. நகராட்சி துணைத்தலைவர் தேன்மொழி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பஞ்சு, ஆசிரியர் பயிற்றுனர் ராஜா, பள்ளி முதல்வர் தினேஷ் துவக்கி வைத்தனர்.

மாணவர்களுக்கு பரிசு


திருமங்கலம்: மேல, கீழ உரப்பனுார், ஊராண்ட உரப்பனுார் துவக்கப் பள்ளிகளில் நேற்று பள்ளிக்கு வந்த 120க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தண்ணீர் பாட்டில், பேனா, பென்சில், ஸ்கெட்ச் உள்ளிட்ட பொருட்களை ஊராட்சி தலைவர் யசோதை, மகன் சாமிநாதன் சொந்த செலவில் பரிசாக வழங்கினர். மாணவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மாணவர்கள் உற்சாகம்


திருமங்கலம்: அரசு பெண்கள் பள்ளியில் 6ம் வகுப்பில் புதியதாக 170 மாணவிகளும், 11ம் வகுப்பில் 418 மாணவியரும் சேர்ந்தனர். பள்ளிக்கு வந்த அவர்களை தலைமையாசிரியர் ரோஜா வினோதினி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயராமன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ஸ்ரீதேவி மற்றும் ஆசிரியர்கள் சந்தனம், சாக்லேட், ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.

உச்சபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இனிப்புகள் வழங்கியும், புத்தகங்களை வழங்கியும் ஆசிரியர்கள் வரவேற்றனர். பழைய மாணவர்கள் அம்மன், பபூன், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தனர். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்






      Dinamalar
      Follow us