ADDED : ஜூலை 31, 2024 04:22 AM
கலந்துரையாடல்
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் பெண்கள் பாலியல் தொடர்பான குற்றம், பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், சுயநிதிப்பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். டீன் அழகேசன் வரவேற்றார். எஸ்.ஐ.,க்கள் ரமா, அமுதா, கார்த்தியாயினி, முருகேஸ்வரி, வளர்மதி பேசினர். மாணவி ஹரிணி நன்றி கூறினார்.
யோகா பயிற்சி
திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா கல்லுாரி மகளிர் மேம்பாட்டுக் குழு சார்பில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் சீனிவாசன், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனர். பயிற்சியாளர் வைஷ்ணவி, 'யோகாசனங்களின் பயன்கள், நன்மைகள்' குறித்து விளக்கம் அளித்து, பயிற்சி அளித்தார். ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா நன்றி கூறினார்.
பயிற்சி முகாம்
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி வேலைவாய்ப்பு மையம் சார்பில் வணிகவியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன், வணிகவியல் துறை தலைவர் ஜெயக்கொடி முன்னிலை வகித்தனர். வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார் வரவேற்றார். ஜே.சி.ஐ மண்டல பயிற்சியாளர் கணபதி, ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் பேசினர். உதவிப் பேராசிரியர் அழகுமுருகன் நன்றி கூறினார்.