ADDED : ஜூலை 01, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* விழிப்புணர்வுஊர்வலம்
மதுரை சி.புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஜவஹர்லால் நேரு தலைமையில் சர்வதேச போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சிலைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் கோகிலா, பசுமைப் படை திட்ட அலுவலர் செல்வபிரபா, மாணவர்கள், ஆசிரியர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர்.
-
* புத்தாக்க பயிற்சி
மதுரைக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆங்கில புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. முதல்வர் சுரேஷ் தலைமை வகித்தார். 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஆங்கிலத்துறை பேராசிரியர் வெங்கடேஷ் தொகுத்து வழங்கினார். துறைத் தலைவர் ஷீலா உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். மாணவி நந்தினி நன்றி கூறினார்.